இலங்கை - பாகிஸ்தான் ஒருநாள் போட்டித்தொடர் இன்று

இலங்கை கிரிக்கட் அணி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கட் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டித் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.

ஐந்துபோட்டிகளை கொண்ட இந்த ஒரு நாள் தொடரின் முதல் போட்டி டுபாய் சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இலங்கை நேரப்படி மாலை 4.30 க்கு பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.

 

டெஸ்ட் சுற்றுத்தொடரில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் இலங்கை அணி போட்டியில் களமிறங்குகிறது. எனினும் முக்கியமான வீரர்கள் இடம்பெறாத காரணத்தால் இலங்கை அணி சவாலை எதிர்கொள்ளவுள்ளது.

 

இலங்கை அணியில் அஞ்சலோ மெத்தியூஸ், லசித் மாலிங்க ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. திமுத் கருணாரட்ன, ரங்கன ஹேரத், தில்ருவான் பெரேரா ஆகியோர் தாய்நாடு திருப்பியுள்ளனர்.

 

இதுதவிர கடைசியாக நடந்த ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வி கண்டிருந்தது. பாகிஸ்தான் ஒரேயொரு போட்டியில் மாத்திரமே தோல்வியை தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.