70வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழில் பல நிகழ்வுகள்

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

இந்திய சுதந்திர தினத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவையும், நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மஹோற்சவத்தையும் முன்னிட்டு இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


இதனை முன்னிட்டு நாளை (12) ஸ்ரீதேவி நடித்த 'மம்' திரைப்படம் ராஜா திரையரங்கில் பிற்பகல் 2.30 க்கு திரையிடப்படவுள்ளது. இவற்றிற்கான நுழைவுச்சீட்டுக்கள் இலவசம்.

 

எதிர்வரும் 16ம் திகதி சங்கிலியன் தோப்பில் பெங்களுரைச் சேர்ந்த மஞ்சுநாத் சகோதர்களின் வயலின் இசைக்கச்சேரி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

ஆகஸ்ட் 17ம் திகதி மஞ்சுநாத் சகோதர்களின் வயலின் இசைக்கச்சேரியும் பயிற்சிப் பட்டறையும், வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கல்யாண மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

 

நாளை முதல் எதிர்வரும் 21ம் திகதி வரை நல்லூர் சுகாதார பணிமனையில் தொடர் புத்தக கண்காட்சி ஏற்பாடாகி உள்ளது. இதில் இலங்கை, இந்திய பதிப்பகங்கள் பங்கேற்பதாக துணை உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார்.