உயர்கல்விக்கான கடன்வசதிகள் எதிர்கால இலங்கைக்கு சிறந்த முதலீடு - பிரதமர்

உயர்கல்விக்காக கடன் வசதிகளை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் பலாபலன்கள் எதிர்கால இலங்கைக்கு சிறந்த முதலீடாக அமையுமென்று ,மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்காக ஹோமாகம தியகம பிரதேசத்தில் நிறுவப்பட்ட தொழில்நுட்ப நிறுவனத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

இந்நிறுவனம் ஆயிரத்து 250 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.சகல பிள்ளைகளுக்கும் 13 வருட அடிப்படை கல்வி கட்டாயமாக்கப்படவுள்ளது. இந்த காலப்பகுதியில் கடைசி இரண்டு வருடங்களில் சகல மாணவர்களுக்கும் ட்ரெப் கணனிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தொழில் கல்வியை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். Nனுவு தொழில்நுட்ப நிறுவகத்தில் உயர்கல்வி தொடரும் மாணவர்கள் பொறியியல் பட்டத்தைப் பெறுவதற்கான அமைப்பை ஸ்தாபிப்பது அவசியம் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்றுகையில்,
பல்கலைக்கழகங்கள் சுயாதீனமாக இயங்கக்கூடிய நிலைமையை ஏற்படுத்தப் போவதாக தெரிவித்தார். அரச, தனியார் பல்கலைக்கழகங்களின் தரத்தை பேணுவது தொடர்பான சட்டமூலம் வகுக்கப்பட்டுள்ளது. இது விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் மேலும் அவர் கூறினார்.