பஹ்ரேனில் சிக்கியிருந்த 290 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமான பஹ்ரேனில் சிக்கியிருந்த 290 இலங்கையர்கள் இன்று (05) நாடு திரும்பியுள்ளனர்.
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றின் மூலம் குறித்த நபர்கள் வருகை தந்துள்ளனர்.
இவர்களுள் அதிகமானவர்கள் அந்நாட்டிற்கு வேலைக்கு சென்றவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பீ.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.