ஜனாதிபதி நாளை பங்களாதேஷ் பயணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை பங்களாதேஷிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்கின்றார்.

ஜனாதிபதி இந்த விஜயத்தின்போது அப்துல் ஹமீட் மற்றும் பிரதமர் சேய்க் ஹசீனா ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.


இந்த பேச்சுவார்த்தையின் போது இருதரப்பு நல்லுறவு குறித்தும் இருதரப்பு உடன்படிக்கைகளிலும் கைச்சத்திடவுள்ளார். பொருளாதார விவசாய துறையில் இருநாடுகளுக்கிடையில் செயற்பாடுகளை வலுவூட்டுட்டுவதே இதன் நோக்கமாகும்.


வர்த்தகக் கூட்டத்திலும் ஜனாதிபதி இதன்போது கலந்துகொள்ளவுள்ளார். இலங்கை மற்றும் பங்களாதேஷிற்கு இடையிலான வர்த்தக உடன்படிக்கைகள் பல கைச்சாத்திடப்படவுள்ளன. எதிர்வரும் 15ம் திகதி வரை ஜனாதிபதி பங்களாதேஷில் தங்கியிருக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.