கடலில் மூழ்கிய யானை மீட்பு

கொக்கிளாய் கொக்குதுடுவைக்கு 8 கடல்மைல்களுக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் உயிருக்காக போராடிக்கொண்டிருந்த காட்டு யானை ஒன்றினை வெற்றிகரமாக இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

வழக்கமான ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினருக்கு மீனவர்களினால் விடுக்கப்பட்ட அவசர அழைப்புக்கமைய நேற்றைய தினம் கிழக்கு பிராந்திய கடற்பரப்பில் குறித்த யானை காப்பாற்றப்பட்டுள்ளது.


நிர்க்கதிக்குள்ளான யானை தொடர்பான மீட்புப்பணியில் கடற்படைக்குச் சொந்தமான அதிவிரைவு தாக்குதல் படகு மற்றும் செட்ரிக் படகுகளுடன் கடற்படை சுழியோடிகள் ஈடுபட்டனர். அத்துடன் வனஜீவராசிகள் பரிபாலன திணைக்கள அதிகாரிகள் குழு ஒன்றும் குறித்த மீட்பு பணிகளில் இணைந்து செயற்பட்டனர்.

 

கடற்படை மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குழுவினரது முயற்சியில் கடற்கரைக்கு திசை திருப்பப்பட்ட குறித்த காட்டுயானை புல்மோட்டை யானு ஓயா பிரதேச வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.

 

இலங்கை கடற்படை வீரர்கள் நீர்பரப்பில் தத்தளித்த வனஜீவராசிகள் பலவற்றின் உயிரினை இதுபோன்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் காப்பாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.