மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 308 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் 3 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 308 என்ற வெற்றி இலக்கை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.
கண்டி, பல்லேகெலே விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 307 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்ப்பில் குசல் மென்டிஸ் 55 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 51 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.