அரச மருந்தாளர் சங்கத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழா

அரச மருந்தாளர் சங்கத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று  இந்த நிகழ்வு இடம்பெற்றது.

 

அரச மருந்தாளர் சங்கம் 1500 உறுப்பினர்களுடன் சுகாதாரத் துறையில் ஒரு முக்கியமான பணியை நிறைவேற்றிவரும் தொழில்சார் அமைப்பாகும்.

 

மருந்தாளர்களின் 60 வருட வரலாற்றில் மருந்தாக்கல் தொழிற்கல்வியை மேம்படுத்துவதற்குப் பங்களிப்புச் செய்த பல்கலைக்கழகங்களின் மருந்தாக்கல் திணைக்களங்களுக்கு ஜனாதிபதியினால் விருதுகள் வழங்கப்பட்டன.

 

சுகாதார அமைச்சினால் நடத்தப்படும் மருந்தாளர் டிப்ளோமா பாடநெறியை உயர் டிப்ளோமா பாடநெறியாக அறிவிக்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.

 

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.