மாங்குளம் நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

மாங்குளத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நீதி மற்றும் பௌத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ மற்றும் நீதி மற்றும் பௌத்தசாசன பிரதியமைச்சர் எச்.ஆர். சாரதி துஸ்மந்த மித்திரபால ஆகியோர் அடிக்கல் நாட்டி வைத்தனர்.


குறித்த நீதிமன்ற கட்டடத் தொகுதி நிர்மாணப் பணிகளுக்காக அரசாங்கம் 460 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த நிகழ்வில் அமைச்சர்கள் , முல்லைத்தீவு அரசாங்க அதிபர், நீதிபதிகள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட நீதிமன்ற பணியாளர்கள் கலந்துகொண்டனர்.