கறுவா பொதியிடுபவர்களுக்கான செயலமர்வு

கறுவா பொதியிடுபவர்களுக்கான தொடர் செயலமர்வொன்று நடைபெறவுள்ளது.

ஆரம்ப கைத்தொழில் அமைச்சும் திறன் அபிவிருத்தி தொழிற்பயிற்சி அமைச்சும் இணைந்து ஏற்பாடுசெய்துள்ள இந்த செயலமர்வு தொழில் ரீதியில் கறுவா பொதியிடல் மற்றும் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோரை உருவாக்குவதே நோக்கமாகும்.

 

இதன் கீழ் ஜூலை மாதம் 1ம் திகதி மாத்தறை மற்றும் அம்பலாங்கொடையிலும் எதிர்வரும் 2ம் திகதி அகலவத்தை மற்றும் கொடக்காவெலவிலும் இந்த செயலமர்வு நடைபெறவுள்ளது.