ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் பாகிஸ்தான் வசம்

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணப்போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.

இலண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி 180 ஓட்டங்களால் அமோக வெற்றி பெற்றது.


இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 338 ஓட்டங்களைப் பெற்றது.


339 என்ற ஓட்ட இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியை 30.3 ஓவர்களுள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 158 ஓட்டங்களுடன் பாகிஸ்தான் அணி தோற்கடித்தமை குறிப்பிடத்தக்கது.