நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தெங்கு ஆய்வு நிறுவனம்

இலங்கை தெங்கு ஆய்வு நிறுவனத்திற்கு நவீன தொழில்நுட்பத்தை கொண்ட இரசாயன கூடமொன்று அமைக்கப்படவுள்ளது.

இதற்காக 47 மில்லியன் ரூபா செலவில் இரண்டு மாடிக் கட்டடங்கள் நிர்மாணிக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

இத்தொகையில் 23 மில்லியன் ரூபா ஒன்றிணைக்கப்பட்ட நிதியத்தின் மூலம் வழங்கப்படவுள்ளதுடன், எஞ்சிய தொகையை தெங்கு ஆய்வு நிறுவனம் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிறுவனத்தின் இரசாயன கூடம் சர்வதேச தரத்துடன் மேம்படுத்தப்படவுள்ளதாக பெருந்தோட்ட தொழில்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.