இலங்கை - ஸிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி

இலங்கை - ஸிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 30ம் திகதி காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. 
 
 
ஸிம்பாப்வே அணி இலங்கை அணியுடன் நான்கு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளும். இந்தப்போட்டிகளில் இரண்டு காலி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 
 
ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி ஜூலை இரண்டாம் திகதி நடைபெறவுள்ளது. 
 
 
காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் ஒருநாள் போட்டித் தொடர் 17 வருடங்களின் பின்னர் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.