இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ரெஸ்ட் கிரிக்கெட் போட்டி

சுற்றுலா இலங்கை கிரிக்கெட் அணிக்கும் - பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான முதலாவது ரெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகின்றது.
இந்தப் போட்டி பாகிஸ்தானில் ராவல்பிண்டியில் இடம்பெறவுள்ளது. இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்ன தலைமைதாங்குகின்றார். இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டு ரெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் 19ஆம் திகதி கராச்சியில் இடம்பெறவுள்ளது.
2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூன்றாம் திகதி லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சுமார் பத்து வருடங்களின் பின்னர் இலங்கை அணி பாகிஸ்தான் மண்ணில் ரெஸ்ட் போட்டிகளில் கலந்துகொள்ளுகின்றன. . இலங்கை அணிக்கு அதிகப்பட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அரச தலைவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை இலங்கை அணிக்கும் வழங்க பாகிஸ்தான் அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.