அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியின் மூன்றாம் நாள் இன்று

கொழும்பு சுகததாஸ மைதானத்தில் நடைபெற்று வரும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியின் மூன்றாம் நாள் இன்றாகும். இதுவரை 15 போட்டிகளின் சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன.
சாதனைகளின் பதக்க பட்டியலில் மேல் மாகாணம் முதலாம் இடத்திலும், வடமேல் மாகாணம் இரண்டாம் இடத்திலும் மற்றும் மத்திய மாகாணம் மூன்றாம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.