தென் கொரியாவிடம் 8 கோல்களுடன் ஆட்டமிழந்த இலங்கை அணி

தென் கொரியாவின் ஹ்வாசியோங்கில் உள்ள ஹ்வாசியோங் அரங்கில் இடம்பெற்ற, 2022 பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியின் இலங்கைக்கு எதிரான முதல் கட்ட ஆட்டத்தில் தென் கொரிய அணி 8-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
ஏற்கனவே இடம்பெற்ற துர்க்மெனிஸ்தான் அணிக்கு எதிரான மோதலை 2-0 எனவும் வட கொரியாவுக்கு எதிரான மோதலை 1-0 எனவும் இழந்த இலங்கை அணி கடந்த (10) H குழுவில் உள்ள பலம் மிக்க அணியான தென் கொரியாவை சந்தித்தது.
ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் இலங்கை வீரர்கள் முழுமையாக தமது பின்களத்தில் தடுப்பாட்டத்தை மேற்கொள்ள எதிரணியினரால் எதனையும் செய்ய முடியாமல் போனது. போட்டி நிறைவில் 8-0 என தோல்வியை சந்தித்த இலங்கை அணி இந்த தகுதிகாண் தொடரில் தமது தோல்வியை பதிவு செய்தது.
இலங்கை அணி தனது அடுத்த மோதலில் எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பில் வைத்து லெபனான் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.