இலங்கை பங்களாதேஷ் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான போட்டித்தொடர் 26 ஆம் திகதி ஆரம்பம்

பங்களாதேஷ் இலங்கை அணியுடனான கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
ஒருநாள் போட்டிக்காக இலங்கை அணி வீரர்கள் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது. இதற்கான அனுமதியினை பெற்றுக்கௌ;வதற்காக இது தொடர்பான ஆவணம் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச கிறிக்கெட் போட்டிகள் மூன்றும் பகல் இரவு போட்டிகளாக நடைபெறவுள்ளன. இதில் ஒருநாள் போட்டியில் விளையாடிய பின்னர் லசித்மாலிங்க ஒருநாள் போட்டியில் இருந்து விடைபெறவுள்ளார் . தற்பொழுது இவர் அவுஸ்ரேலியாவுக்கு சென்றுள்ளார். எதிர்வரும் 21 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.