நியூசிலாந்து - அவூஸ்திரேலிய அணிகள் இன்று பலப்பரீட்சை

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் அரை இறுதியை உறுதி செய்யும் முனைப்பில் உள்ள நியூசிலாந்து அணி அவூஸ்திரேலிய அணியை இன்று எதிர்கொள்ளுகின்றது.
மற்றொரு போட்டியில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்த லீட்சில் நடக்கும் 36-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. எஞ்சிய 2 ஆட்டத்திலும் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் உள்ள சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தானுக்கு இன்றைய போட்டி பெரிய அளவில் கடினமாக இருக்காது.
இருப்பினும் இந்தியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி சுழற்பந்து வீச்சு தாக்குதல் மூலம் 224 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியதை பாகிஸ்தான் வீரர்கள் மறந்து விடமாட்டார்கள். அந்த ஆட்டத்தில் இந்தியா பெரும்பாடு பட்டு 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே ஆப்கானிஸ்தானை எந்த வகையிலும் சுலபமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று வீரர்களை பாகிஸ்தான் அணி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த போட்டி பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகிறது.
லண்டன் லார்ட்சில் நடக்கும் மற்றொரு லீக் போட்டியில் சாம்பியனான ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவூஸ்திரேலிய அணி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
7 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி ஒரு தோல்வி என்று 12 புள்ளியுடன் முதலிடம் வகிக்கும் ஆஸ்திரேலியா அணி முதல் அணியாக அரைஇறுதிக்குள் நுழைந்து விட்டது. வெற்றிப்பயணத்தை நீட்டித்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.
நியூசிலாந்து அணி 5 வெற்றி ஒரு முடிவில்லை ஒரு தோல்வி என்று 11 புள்ளியுடன் 3ஆவது இடத்தில் உள்ளது. முதல் 6 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத நியூசிலாந்து அணி முன்பு லீக்கில் பாகிஸ்தானிடம் தோற்றது.
இன்றைய போடடியில் வெற்றி பெற்றால் நியூசிலாந்து அணி அரை இறுதியை உறுதி செய்து விடும். ஆனால் அந்த பணி எளிதல்ல என்பதை அறிவார்கள்.
இவ்விரு அணிகளும் ஒரு நாள் கிரிக்கெட்டில் 136 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 90-ல் ஆஸ்திரேலியாவும் 39-ல் நியூசிலாந்தும் வெற்றி கண்டுள்ளன. 7 போட்டிகளில் முடிவில்லை. உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை எடுத்துக் கொண்டால் இவ்விரு அணிகளும் 10 போட்டிகளை சந்தித்து 7-ல் அவூஸ்திரேலியாவும் 3யில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. இந்தப் போட்டி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகவள்ளது.