சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு நாளாந்தம் 9000 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

1929 என்ற இலங்கை சிறுவர் பயன்பாட்டு தொலைபேசி சேவைக்கு வருடாந்தம் 9000 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கின்றன.
இவற்றில் சுமார் 1500 முறைப்பாடுகள் கட்டாய கல்வி தொடர்பான விதிகளை மீறப்பட்டமை குறித்த முறைப்பாடுகளே ஆகும் என்று தேசிய சிறுவர் அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி ஏ.எம்.அபேரட்ண தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.