இந்தியாவுக்கு ,அமெரிக்க அளித்த வர்த்தக சலுகை இரத்து

வரியற்ற வர்த்தக முன்னுரிமை திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வந்த இறக்குமதி சலுகை திட்டம் .ம்மாதம் 5ம் திகதி முதல் இரத்து செய்யப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி; டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்தியா உள்ளிட்ட 120 வளரும் நாடுகள் தங்கள் தயாரிப்புகளை, எவ்வித வரியும் செலுத்தாமல் அமெரிக்காவில் விற்பனை செய்வதற்கான சலுகையை, வரியற்ற வர்த்தக முன்னுரிமைச் சலுகை (ஜிஎஸ்பி) திட்டத்தின் கீழ் அமெரிக்கா அளித்து வருகிறது. இதன் மூலம், இந்திய நிறுவனங்கள் அமெரிக்க சந்தைகளில் வர்த்தகம் செய்வதற்கு தடையற்ற வாய்ப்புகள் உருவாகின. ஆனால், அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்வதற்கு போதுமான சந்தை வாய்ப்புகளை இந்தியா உருவாக்கவில்லை. இதனால், ஜிஎஸ்பி திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு அளித்துவரும் சலுகையை இரத்து செய்ய உள்ளதாக டிரம்ப் கடந்த மார்ச் 4ஆம் திகதி அறிவித்தார். இதற்கான உத்தரவை வெளியிடுவதற்குரிய 60 நாள் அவகாசம் கடந்த மே 3ஆம் திகதியுடன் முடிந்தது. இந்நிலையில், டிரம்ப் நேற்று இதற்கான ஆணையை வெளியிட்டார். அதில், அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்திய சந்தையில் போதிய, நியாயமான வாய்ப்புகள் வழங்குவதை இந்தியா உறுதி செய்யாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதனால், இந்தியாவுக்கு அளித்து வந்த, சிறப்புரிமை சலுகையை வரும் ஜூன் 5ஆம் திகதி முதல் இரத்து செய்வது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்' என கூறப்பட்டுள்ளது. 'இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையால், அமெரிக்க வர்த்தக நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 300 மில்லியன் அமெரிக்க டாலர் கூடுதல் வரிச்சுமை ஏற்படும்' என்று செனட் எம்பி.க்கள் தெரிவித்த எதிர்ப்பையும் மீறி, இந்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.