வெற்றிகரமான இணையதளத்தினூடாக உலகை வலம் வாருங்கள்.

இணையதளம் என்பது இன்றைய டிஜிட்டல் உலகத்தில் வியாபாரத்துக்கு, தனிநபர்ஒருவருக்கு இன்றியமையாதவொரு அம்சமாக விளங்குகின்றது. உங்கள் இணையதளத்தினூடாக வேறுபட்ட பகுதிகளில் கவனம் செலுத்தமுடியும். அது சிலவேளை உங்களது வியாபாரத்தை உலகுக்கு திறந்துகாட்டக்கூடிய ஜன்னலாக இருக்கின்றது. சிலவேளை உங்களது வியாபாரத்தின் இலகுவான பிரதியாக இருக்கின்றது.அது வாடிக்கையாளர்கள் முதலில் காண்கின்ற இடமாகவும், வியாபாரம் நடைபெறுகின்ற மத்திய நிலையமாகவும் இருக்கின்றது. அதேபோல், அது உங்கள் வியாபாரத்தின் படமாகவும் காணப்படுகின்றது. அதை உங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ளவேண்டும். அதற்கு முதலில் உள்ளே நுழைகின்ற ஒருவர், அதனை பார்ப்பதற்கு கவர்ச்சிகரமானதாக இருக்கவேண்டும். அதேபோல், அது Google, Yahoo தேடல் பொறிகளுக்கு இலகுவாக தேடக்கூடியதாக அமைந்திருக்கவேண்டும்.
 
இது தொடர்பில் நீங்கள் அனுபவமுள்ள இணையதள வடிவமைப்பாளர் ஒருவரின் உதவியை நாடவேண்டியிருக்கின்றது. மேலும் நீங்கள் சுயமாகவே அதனை வடிவமைக்கவேண்டுமெனில், அதற்கு Backend ஒன்றை அமைத்துக்கொள்வது அவசியமாகின்றது. இதற்காகவேண்டி பொருத்தமான இலகுவான சொற்களை பயன்படுத்துவதோடு, கவர்ச்சிகரமான படங்களையும் ஒன்றுதிரட்டிக் கொள்ளவேண்டும்.அதன்மூலம் உங்கள் இணையதளம் அதிகமாக மனிதர்களை ஈர்க்கக்கூடியதாகவும், வெவ்வேறுபட்ட கல்வி மட்டத்திலுள்ளவர்களுக்கு அதனை இலகுவாக விளங்கிக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும். மிகவும் இலகுவாக அது ஒருவரது கணனிக்கு பதிவிறக்கம் (download) ஆகக்கூடியதாக இருக்கவேண்டும். பெரும்பாலும் உங்களது இணையதளத்தை 15 செக்கன்களுக்குள் ஒருவருக்குப் பார்க்கக்கூடியதாக இல்லையெனில் அவர் அதனைவிட்டு வெளியேறுகிறார் என ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் உங்களுடைய இணையதள பக்கமானது மிகவும் சிறப்பான முறையில் சரியாக அமைக்கபடல்வேண்டும். உங்களை தொடர்புகொள்ளக்கூடிய வழிமுறையைமிகவும் சரியான முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கவேண்டும். உங்களை, உங்களது தயாரிப்பை பற்றி மிகவும் இலகுவான முறையில் ஆனால்,விளக்கத்துடன் கூடியதாக குறிப்பிடவேண்டும் என்பதை உறுதிப்படுத்திக்கொளளவும். இணையதளத்தில் நுழைந்த உடன் காணக்கூடியதாக, குறித்த தயாரிப்பு பற்றிய சிறிய வீடியோவொன்றை பதிவேற்றியிருப்பது முக்கியமானது என அண்மைக்கால ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். அதற்கான காரணம் யாதேனில், நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் பெரும்பாலும் அதிக வேலையில் இருப்பதால்,அவர்கள் வாசிப்பதற்கு விருப்பம் காட்டுவதில்லை என்பதனாலாகும். அதனால் 30 விநாடிகளில் உங்களைப் பற்றி, உங்களது தயாரிப்பைப்பற்றி மேலோட்டமான கருத்தை உங்களது இணையதளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.
 
உங்கள் இணையதளத்தில் பயன்படுத்துகின்ற மொழிநடை மிகவும் இலகுவாக இருக்கவேண்டியதுடன், அனைத்து வாக்கியங்களும் 12இற்கும் குறைவான சொற்களையே கொண்டிருக்கவேண்டும். ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதற்கு ஏற்ப பெரும்பாலானவர்களுக்கு கணனி திரைகளில் இருக்கின்ற சொற்களை ஒரேதடவையில் தொடர்ச்சியாக வாசிப்பதில் அசௌகரியங்கள் காணப்படுகின்றன. உங்கள் மொழிநடை வழக்கு உங்களதுஇணையதளத்துக்கேயான தனித்துவத்தன்மையுடன் காணப்படவேண்டும். அது, உங்களது இணையதளம் தேடல் பொறியில் முதலில் வருவதற்கு உந்துசக்தியாக அமையும்.
 
உங்களை தொடர்புகொள்வதற்கு முடியுமானவாறு Contact us பக்கமொன்றை கட்டாயமாக அமைத்துக்கொள்ளுங்கள். அதில் உங்களது மின்னஞ்சல் (email), தொலைபேசி இலக்கம் (contact number) என்பவற்றை கட்டாயமாக குறிப்பிடவும்.
உங்களது இணையதளத்தை பயன்படுத்துவது எந்த நாடுகள், எந்த நகரங்களில் உள்ளவர்கள் மற்றும் அவர்களின் பின்னணி பற்றி இலகுவாக அறிந்துகொள்வதற்கு google analytics தயாரிப்பை பயன்படுத்துங்கள். அவர்கள் வழங்குகின்ற Code இனை உங்கள் இணையதளத்தில் ஸ்தாபித்துக்கொள்வதன் மூலம் இலகுவாக உங்களுக்கு இந்த தகவல்களை பார்த்துக்கொள்ளமுடியும். இதற்காகவேண்டி உங்களுக்கு, உங்களது gmail மின்னஞ்சல் முகவரியைப் பாவிக்கமுடியும். அதேபோல் இணையத் தேடல்பொறி ஒருங்கிணைக்கும் பொறியியலாளர்களின் (SEO Engineer) உதவியைப் பெற்று, உங்கள் இணையதளத்தை தேடல் பொறிகளுக்கு நண்பராக்கிக் கொள்ளுங்கள். சமூக வலைத்தளங்களில் உங்களைப்பபற்றி, உங்கள் தயாரிப்புக்களைப் பற்றி பக்கங்களை (Fan Pages) உருவாக்கிக்கொள்ளுங்கள். அதன்மூலம் உங்கள் இணையதளம் பிரபலமடையும்.
 
நீங்கள் இணையதளமொன்றை ஆரம்பிக்கும் போது கீழ்வரும் விடயங்களில் கவனம் செலுத்துங்கள்.
 • வாக்கியங்களை மிகவும் சுருக்கமாக அமைக்கவும்.
 • இலகுவாக இணக்கமடையக்கூடியதாகவும், இலகுவாக பயன்படுத்தக்கூடிய முறையிலும் உங்கள் இணையதளத்தை வடிவமைத்துக் கொள்ளுங்கள்.
 • எப்போதும் நீங்கள் இலக்கு வைக்கின்ற குழுவை கருத்தில்கொண்டு வடிவமைப்பைச் செய்யுங்கள்.
 • உங்களது இணையதளத்தை பயன்படுத்துபவருக்கு கிடைக்கின்ற நன்மைகள்பற்றி குறிப்பிடுவதற்குத் தயங்கவேண்டாம்.
 • இலக்கங்களின் மூலம் அல்லது Bullet பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் கூறவருகின்ற விடயத்தை தெளிவுபடுத்துங்கள்.
 • மிகவும் இலகுவாக கையாளக்கூடியதாகவும், விளங்கிக்கொள்ளக்கூடியதாகவும் தலைப்பு, உபதலைப்பு வரிசையிடையில் இடைவெளி விடுங்கள்.
 • மிகவும் இலகுவாக வாசிக்கக்கூடியவர்களுக்கு அசௌகரியம் ஏற்படாதவாறு வடிவமைப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
 • ஆங்கில மொழியைப் பயன்படுத்தவதாயின் அனைத்து வாக்கியங்களையும் கப்பிட்டல் எழுத்துக்களால் எழுதாதீர்.
 • நீங்கள் பயன்படுத்துகின்ற நிறங்கள் பற்றி கருத்திற்கொள்வதுடன், கண்களுக்குஅசௌகரியமான நிறங்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
 • உங்களது வியாபாரச் சின்னங்களை சரியான இடங்களில் அமைத்துக் கொள்ளவும்.
 • சமூக இணையதள பக்கங்களுக்கு இலகுவாக நுழைவதற்காகவேண்டி தேவையான லிங்கை பெற்றுக்கொடுங்கள்.
 • தற்போது பயன்படுத்தப்படுகின்ற அனைத்து browserகளிலும் இதனை பரீட்சித்துப்பாருங்கள். உதாரணம் - Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera
 • Youtube, Vimeo போன்ற வீடியோ இணையதளங்களைப் பயன்படுத்தி உங்களது இணையதளத்திற்கு வீடியோக்களை சேர்த்துக்கொள்ளுங்கள். அதேபோல், உங்களது வீடியோக்களை இவ்விணையதளங்களுக்கு பதிவேற்றுங்கள். அங்கு நீங்கள் பதிவேற்றுகின்ற வீடியோக்கள் ஏதாவது நிறுவனங்களுக்குச் சொந்தமானதா என்பதை பார்த்துக்கொள்வதுடன், அவ்வாறான வீடியோக்களை பதிவேற்றவதை விட்டும் தவிர்ந்துகொள்ளுங்கள்.
 • உங்கள் இணையதளத்தை, இணையதளங்களுக்கு பிரவேசிக்கக்கூடிய வெவ்வேறுபட்ட சாதானங்களைப் பயன்படுத்தி பரீட்சித்துப்பாருங்கள். அது Responsive Design என்று அறியப்படுகின்றது. உதாரணம் - கைத்தொலைபேசி, டப், லப்டொப் போன்றவற்றிலிருந்து இணையதளத்திற்கு பிரவேசியுங்கள்.
 • உங்கள் இணையதளத்தை அடிக்கடி புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
புலஸ்தி வன்னியாரச்சி - Pulasthi Wanniarachchi
இணையத் தேடல்பொறி ஒருங்கிணைக்கும் பொறியியலாளர் (SEO Engineer)
தமிழில் : இப்ஹாம் நவாஸ் - Ifham Nawas