பெண்களுக்கான தனியான முதலாவது தொலைக்காட்சி சேவை

பெண்களால் பெண்களுக்காகவே நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குகின்ற முதலாவது தெலைக்காட்சி சேவை ஆப்கானிஸ்தானில் ஆரம்பிக்கப்பட்டள்ளது. ஸன் டீவி என்ற குறித்த தொலைக்காட்சி சேவையின் நிர்வாக உறுப்பினர்களில் அதிகமானோர் இளம்பெண்களாவர். அவர்களில் அதிகமானோர் இன்னும் கல்விகற்றுக் கொண்டிருக்கின்ற மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி சேவைகள் ஆணாதிக்கத்திற்கு உட்பட்டிருக்கின்ற நிலையில், ஸன் தொலைக்காட்சி சேவை ஒரு புது அனுபவமாகும்.