உலகில் மிகவேகமான திரைப்படங்கள் தயாரிப்புக்கு கின்னஸ் சாதனை இலங்கைக்கு கிடைத்துள்ளது.

உலகில் மிகவேகமாக திரைப்படங்கள் தயாரிப்புக்கு கிடைக்கின்ற கின்னஸ் சாதனை இலங்கை ஒருவருக்கு கிடைத்துள்ளது. திரைப்பட இயக்குணர் நந்தன கேடாபத்த அவர்கள் தயாரித்துள்ள ‘மங்கல கமன’ என்ற திரைப்படத்துக்கு இந்த கின்னஸ் சாதனை கிடைக்கப் பெற்றுள்ளது.

1 மணித்தியாலமும் 25 நிமிடங்களும் கொண்ட இந்த திரைப்படத்தைத் தயாரிக்க, அவருக்கு வெறும் 71 மணித்தியாலமும் 19 நிமிடங்களே சென்றுள்ளது.2014ஆம் வருடம் மே 21 முதல் 25 வரையான காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்பட்டம், கடந்த ஆகஸ்ட் 9ஆம் திகதி நல்லிரவில் கின்னஸ் சாதனையை பெற்றுக்கொண்டது என கின்னஸ் குழு
www.guinnessworldrecords.com/world-records/fastest-film-produced-(script-to-screen) என்ற தமது இணையதளத்தின் ஊடாக அறிவித்திருந்தது.