சீரற்ற காலநிலையினால் 10 000ற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

சீரற்ற காலநிலையின் விளைவுகளால் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,996 குடும்பங்களைச் சேர்ந்த 1,698 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர்காப்பு முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.மொஹமட் றியாஸ் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் ஆயிரத்து 46 குடும்பங்களைச் சேர்ந்த 3,872 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இங்கு ஒரு வீடு முழுமையாகவும், 27 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. சேருவில, மூதூர், கிண்ணியா, வெருகல், குச்சவெளி, தம்பலகாமம், திருகோணமலை நகரம் ஆகிய பிரதேசங்களில் பாதிப்பு அதிகம்.

திருகோணமலை மாவட்ட செயலகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கி வருவதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கே.சுகுணதாஸ் தெரிவித்தார்.