மீண்டும் தீர்வைகள் தொடர்பான மேன்முறையீட்டு ஆணைக்குழு

தீர்வைகள் தொடர்பான மேன்முறையீட்டு ஆணைக்குழு மீண்டும் செயற்படவுள்ளது.
 
இதற்காக பிரதமரும், நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான மஹி;ந்த ராஜபக்ஷ புதிய அங்கத்தவர்களை நியமித்துள்ளார்.
 
இதன் நீதிபதி ஹெக்டர் யாப்பா ஆணைக்குழுவின் தலைவர.. நீதிபதி சுனில் ராஜபக்ஷ, முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் எஸ்.சொர்ணஜோதி ஆகியோர் ஏனைய அங்கத்தவர்கள் ஆவார்.
 
வரி செலுத்தும் ஒருவர் ஏதேனும் பிரச்சனையை எதிர்கொள்ளும் பட்சத்தில் ஆணைக்குழுவின் ஊடாக பிரச்சனையை தீர்த்துக் கொள்ள முடியும். இதுவரை தாக்கல் செய்யப்பட்ட 224 மேன்முறையீடுகள் நிலுவையில் உள்ளன. ஆணைக்குழு மீண்டும் இயங்கத் தொடங்கும் பொழுது இவற்றையும் தீர்க்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.