வவுனியா- கிளிநொச்சியிலும் கடும் மழை

வவுனியா- கிளிநொச்சியிலும் கடும் மழை பெய்துவருகிறது.

வவுனியாவில் 5 குடும்பங்களை சேர்ந்த 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் என். சூரியராஜா தெரிவித்தார்.

வவுனியாவில் பெய்த மழையினால் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 4 குடும்பங்களின் வீடு பகுதியளவில் சேதமடைந்தமையால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் காற்றின் காரணமாக 1 வீடு சேதமடைந்தமையால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

இதேவேளை கிளிநொச்சி நகரின் இரத்தினபுரம், ஆனந்தபுரம் கிழக்கு கிராமங்களின் ஒரு பகுதி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது