பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்தியப் பிரதமருக்குமிடையில் இன்று சந்திப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று மாலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை சந்திக்கிறார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. இதனிடையே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்;நாந்த் சிங், வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார். நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உட்பட சிரேஷ்ட தலைவர்களை பிரதமர் சந்தித்திப் பேசினார். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசர் அஜித் தேவலையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று சந்தித்தார்.