இங்கிலாந்து அணி வெற்றி

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், டக்வத் லூயில் முறைப்படி இங்கிலாந்து அணி 31 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டி நேற்று தம்புள்ளை மைதானத்தில் நடைபெற்றது.

279 ஓட்டங்கள் என்ற வெற்றி இலங்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 29 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 140 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில், சீரற்ற காலநிலை குறுக்கிட்டது.

மைதானம் தொடர்ந்தும் ஈரளிப்பாக இருந்தமையினால் டக்வத் லூயில் முறைப்படி இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. போட்டியின் சிறப்பாட்டக்காரராக 92 ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் ஒய்ன் மோர்கன் தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை தம்புள்ளையில் பகல் இரவு போட்டியாக இடம்பெற்ற முதலாவது போட்டியும் மழை பெய்ததன் காரணமாக போட்டி எவ்வித முடிவின்றி கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.